Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெர்க்கலுடனான சந்திப்பை தொடர்ந்து மனம் மாறிய ட்ரம்ப்!

In ஐரோப்பா
Updated: 06:10 GMT, Jul 12, 2018 | Published: 06:10 GMT, Jul 12, 2018 |
0 Comments
1101
This post was written by : Risha

நேட்டோ உச்சிமாநாட்டில் ஜேர்மன் கொள்கையை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கலுடனான சந்திப்பை தொடர்ந்து ஜேர்மனுடனான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரஸ்சல்ஸில் நடைபெற்றுவரும் நேட்டோ உச்சிமாநாட்டின் ஒரு அங்கமாக அமெரிக்க ஜனாதிபதிக்கும், ஜேர்மன் அதிபருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, மெர்க்கலுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பிற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், பாதுகாப்பு செலவீனங்கள் மற்றும் ரஷ்யாவிலிருந்து எரிவாயு இறக்குமதி போன்ற ஜேர்மனின் கொள்கைளை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில்,  மெர்க்கலுடனான சந்திப்பு குறித்து மேலும் தெரிவித்த ட்ரம்ப், ”இராணுவ செலவீனங்கள், வர்த்தகம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதித்திருந்தோம். ஜேர்மன் அதிபருடன் எமக்கு நல்ல உறவு காணப்படுகிறது. ஜேர்மனுடனான வர்த்தக உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என நான் நம்புகின்றேன். ஆனால், எதிர்வரும் காலங்களில் என்ன நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஜேர்மன் அதிபர் கருத்து தெரிவிக்கையில், ”எமது நிலைப்பாட்டை பரிமாறிக் கொள்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த சந்திப்பானது பொருளாதார அபிவிருத்தி, குடியேற்றவாசிகள் பிரச்சினை, இருதரப்பு வர்த்தக உறவின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)