Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடரும் மன்னார் அகழ்வுப்பணி: மேலும் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

In இலங்கை
Updated: 06:47 GMT, Jul 12, 2018 | Published: 06:47 GMT, Jul 12, 2018 |
0 Comments
1110
This post was written by : Litharsan

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணி இன்று (வியாழக்கிழமை) 32 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த அகழ்வுப்பணியில் இதுவரை 23 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதோடு மேலும் 37 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரளவிற்கு முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிரபாகரனின் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் இந்த அகழ்வுப்பணி இடம்பெற்று வருகின்றது. களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அகழ்வின்போது அப்புறப்படுத்தப்படும் மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு, இலக்கமிடப்பட்டு, சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்படுவதோடு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)