Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பட்டியல் தயார்!- இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

In இலங்கை
Updated: 06:47 GMT, Jul 12, 2018 | Published: 06:47 GMT, Jul 12, 2018 |
0 Comments
2069
This post was written by : Risha

மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (வியாழக்கிழமை) கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய இப்பெயர் பட்டியலை தயாரித்துள்ளதாக நீதித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக எதிர்வரும் தினங்களில் உரிய அமைச்சுக்களுடன் விவாதிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு பல முக்கிய அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நிஷான் தசநாயக்க தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)