Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிர்மலாதேவி விவகாரம்: விசாரணைகளை விரைவில் நிறைவுசெய்ய உத்தரவு!

In இந்தியா
Updated: 07:40 GMT, Jul 12, 2018 | Published: 07:40 GMT, Jul 12, 2018 |
0 Comments
1111
This post was written by : Kemasiya

மாணவர்களை தவறாக வழிநடத்திய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கை, எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் விசாரித்து முடிக்குமாறு சி.பி.சி.ஐ.டி.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் பிணை கோரி நிர்மலாதேவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, இன்று (வியாழக்கிழமை) உச்சநீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி முன்னெடுத்துள்ள விசாரணையின் முதல் குற்றப்பத்திரிகை எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், இரண்டாவது குற்றப்பத்திரிகை செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டெம்பர் 24ஆம் திகதி ஆரம்பித்து ஆறு மாத காலத்திற்குள், குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவுற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி.இன் விசாரணையில் நிர்மலாதேவியின் குரல் பதிவு தொடர்பான விசாரணை இடம்பெற்று வருகிறது.

அருப்புக்கோட்டையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியையாக பதவிவகித்த நிர்மலாதேவி, மாணவர்களை (பாலியல் தொல்லை) தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் மாணவர்களுடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவுகள் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)