Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களுக்கு நிதி சுதந்திரம் அவசியம்: பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 11:09 GMT, Jul 12, 2018 | Published: 08:19 GMT, Jul 12, 2018 |
0 Comments
1063
This post was written by : Kemasiya

பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க அவர்கள் நிதி சுதந்திரம் பெற வேண்டியது அவசியம் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுடன், இன்று (வியாழக்கிழமை) காணொளி மூலம் உரையாற்றிய மோடி மேற்படி தெரிவித்துள்ளார்.

பெண்கள் அதிகாரம் பெற அவர்களுக்கு யாரும் கற்பிக்க வேண்டியதில்லை என்றும், நிதி சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்ததே போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கிராமப்புற மகளிரும் இந்த அதிகாரத்தை பெறுவதன் மூலமே, ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம் சாத்தியமாகுமென பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் நிதி சுதந்திரம் பெற்ற பெண்கள் அனைவரும் சமூக தீமைகளுக்கு எதிராக வெற்றிகண்டவர்கள் என்றும், பெண்களின் முன்னேற்றத்தில் சுய உதவிக் குழுக்களின் பங்கு மகத்தானது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரை 45 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு ஐந்து கோடி பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும், குறித்த மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் உரியாடியமை உத்வேகம் நிறைந்ததாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)