Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரிய ஜனாதிபதி சிங்கப்பூர் விஜயம்: ஒப்பந்தங்கள் கைச்சாத்து

In
Updated: 13:11 GMT, Jul 12, 2018 | Published: 09:34 GMT, Jul 12, 2018 |
0 Comments
1080
This post was written by : Johnson paiva

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  சிங்கப்பூர் சென்றுள்ள தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜேன் இன், அந்நாட்டு பிரதமர் லீ செயின் லூங் மற்றும் ஜனாதிபதி ஹலிமா யாகோப் ஆகியோரைச் சந்தித்துள்ளார். அத்தோடு, இரு நாடுகளுக்கு இடையில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகியுள்ளன.

சிங்கப்பூர் ஜனாதிபதி மாளிகையான இஸ்தானாவில் இன்று (வியாழக்கிழமை) தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேன் இன், வெளிவிவகார அமைச்சர் கங் கியங் வா மற்றும் தென்கொரிய பிரதிநிதிகள் வரவேற்கப்பட்ட பின்னர் இச்சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர், “அண்மையில் இடம்பெற்ற வடகொரிய-அமெரிக்கத் தலைவர்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் மிக்க பேச்சுவார்த்தையானது, இருநாடுகளுக்கிடையிலான சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் கொரியத் தீபகற்பத்தில் அமைதி ஏற்படுவதற்கும் உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த தென்கொரிய ஜனாதிபதி, தொழிநுட்ப மற்றும் உயர்தொழிநுட்ப துறைகளில் சிங்கப்பூரின் நெருக்கமான ஒத்துழைப்பினைப் பெறுவதற்கு தென்கொரியா  விரும்புகின்றதெனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு துறைசார் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)