Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபல வீரருக்கு வலை விரிக்கும் முக்கிய அணி

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:36 GMT, Jul 12, 2018 | Published: 09:36 GMT, Jul 12, 2018 |
0 Comments
1593
This post was written by : Litharsan

தற்போதைய கால்பந்து உலகில், மிகவும் பணக்கார கால்பந்து அணியாகக் கூறப்படும் பிரான்ஸின் பாரிஸ் செயிண்ட்- ஜேர்மன் எப்.சி அணி தற்போது பிரபல வீரரொருவருக்கு வலை விரித்துள்ளது.

தற்போது கழக அணிகள் மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடிவரும் பிரேஸில் கால்பந்து அணியின் மத்திய கள வீரரான பிலிப்பே கவுட்டினோவே அவர்களின் இலக்காக அமைந்துள்ளது.

அந்தவகையில் இடமாற்றம் முறையில் அவரை அணிக்கு உள்வாங்குவதற்கு பரிஸ் செயிண்ட்- ஜேர்மைன் எப்.சி அணி, விருப்பம் தெரிவித்துள்ளது.

பிலிப்பே கவுட்டினோவுக்கு 239 மில்லியன் பவுண்ஸ்கள் விலையை பரிஸ் செயிண்ட்- ஜேர்மைன் எப்.சி அணி, நிர்ணயித்த போதும் அவரை, விடுவிக்க பார்சிலோனா அணி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

6 மாதத்திலேயே சுமார் 100 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கும் என்றாலும், பார்சிலோனா மறுத்துவிட்டது. தற்போது கவுட்டினோவின் இடமாற்றம் விலை 352 மில்லியன் பவுண்ட்ஸ்கள் எனவும் உயர்த்திவிட்டது.

கவுட்டினோ கடந்த இரண்டாவது பாதி நேரத்தில் 22 போட்டிகளில் 10 கோல் அடித்துள்ளார். 6 கோல்கள் அடிக்க துணை புரிந்துள்ளார்.

பாரிஸ் செயிண்ட்- ஜேர்மன் எப்.சி அணி, அணி கடந்த சீசனில் கால்பந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, 200 மில்லியன் பவுண்ட்ஸ்கள் கொடுத்து பிரேஸில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மரை பார்சிலோனாவில் இருந்து வாங்கியது.

நெய்மர் சென்றதால் லிவர்பூல் அணியில் விளையாடிய மற்றொரு பிரேசில் வீரரான பிலிப்பே கவுட்டினோவை 142 மில்லியன் பவுண்ட்ஸ்கள் கொடுத்து பார்சிலோனா வாங்கியது.

இந்நிலையில், கவுட்டினோவையும் பார்சிலோனா அணியிடமிருந்து தட்டிப் பறிக்க பாரிஸ் செயிண்ட்- ஜேர்மன் எப்.சி அணி, வியூகம் அமைத்துள்ளது. ஆனால், இந்த தொகையை கொடுத்து பிலிப்பே கவுட்டினோவை, குறித்த அணி, வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)