Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவிற்கு எதிராக கிரேக்கர்கள் ஆர்ப்பாட்டம்

In உலகம்
Updated: 10:26 GMT, Jul 12, 2018 | Published: 10:00 GMT, Jul 12, 2018 |
0 Comments
1045
This post was written by : Farwin Hanaa

அமெரிக்காவிற்கும் பிரசல்ஸில் இடம்பெற்றுவரும் நேட்டோ உச்சிமாநாட்டிற்கும் எதிா்ப்பு தொிவித்து, கிரேக்கத்தின் எதன்ஸ் நகரில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கின்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அமெரிக்காவிற்கும் நேட்டோ உச்சிமாநாட்டிற்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

சிரிய மக்களின் சிவில் பிரச்சனைகளுக்குள்ளும் மத்தியகிழக்கு நாடுகளின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குள்ளும் தலையிடுவதே அமெரிக்காவின் நோக்கமென இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த சந்தர்ப்பத்தில், அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் எங்கு சென்றிருந்தன என்றும் கேள்வியெழுப்பினர். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத இந்நாடுகள் இப்போது தேவையற்ற ரீதியில் தலையீடு செய்யவே நேட்டோவில் பேசி வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மக்களை கைவிட்டதால், அகதிகளால் ஐரோப்பிய நாடுகள் நிரம்பி வழிகின்றன என்றும் கோஷமிட்டனர்.

எதென்ஸின் தேசிய கெபடிஸ்ரெய்ன் பல்கலைக்கழகத்தின் முன்பாக கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்து ஹெலெனிக் நாடாளுமன்றம் வரை சென்று, இறுதியாக கிரேக்கத்திலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் கூடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)