Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபல வீரர் மீது ஊக்கமருந்து பாவனை குற்றச்சாட்டு

In கிாிக்கட்
Updated: 09:52 GMT, Jul 12, 2018 | Published: 09:52 GMT, Jul 12, 2018 |
0 Comments
1095
This post was written by : Litharsan

கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் மற்றும்  ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டு, தமது கிரிக்கெட் எதிர்காலத்தை தொலைப்பது வாடிக்கையாகிவிட்டது.

பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத், தற்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இதன்மூலம், ஏற்கனவே ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய அணியின் முன்னாள் வீரர்களான சொஹைப் அக்தார், மொஹமட் ஆசிப், அப்துல் ரஹ்மான் மற்றும் ரிஸா ஹசன் ஆகியோருடன் அஹமட் ஷேசாத், இணைந்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 26 வயதுடைய அனுபவமிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் ஷேசாத் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் கிண்ண ஒரு நாள் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்தார். அப்போது அவரது சிறுநீர் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்படி, இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதன் முடிவு கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அதில் அவர் மரிஜுவானா என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன், கடந்த மாதம் 20ஆம் திகதி ஊடகங்கள் வாயிலாக செய்திகளும் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தனது டுவிட்டரில் இதனை உறுதி செய்திருந்தது. ஆனால் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டுள்ளார் என்பதை அந்நாட்டு ஊக்கமருந்து தடுப்புப் பிரிவு உறுதி செய்யும் வரை குறித்த வீரரை குற்றவாளியாக அறிவிக்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவித்தது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு பிரிவு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அந்நாட்டு ஊக்கமருந்து தடுப்பு பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் குற்றப்பத்திரகை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கம் அளிப்பதற்கு அஹமட் ஷேசாத்துக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வீரர்களுக்கான ஒழுக்க விதிமுறைகளில் ஊக்கமருந்து தொடர்பான 8.1 பிரிவின்படி, வீரர் ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியது, உடற்கூற்று முகவர்களை சந்திப்பது, தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை உட்கொள்வது ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டால் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் போட்டித் தடை விதிக்கப்படும்.

எனவே அஹமட் ஷேசாத் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)