Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! – 13 பேர் படுகாயம்

In இந்தியா
Updated: 11:07 GMT, Jul 12, 2018 | Published: 10:47 GMT, Jul 12, 2018 |
0 Comments
1041
This post was written by : Kemasiya

ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்காக பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

உதம்பூரில் உள்ள பிர்மா பாலம் அருகே, வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் பேருந்து மோதியதில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த 13 பேரையும் உடனடியாக மீட்ட பொலிஸார், அவர்களை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குறித்த பேருந்தின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டதாகவும், அவரை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் சிக்கியவர்கள் உத்தரபிரதேசம், ஜான்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காயப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)