Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய மீனவர் விவகாரத்தில் புதிய சட்டத்தைப் பயன்படுத்துங்கள் – வட.மாகாண கடற்றொழில் இணையம்

In இலங்கை
Updated: 11:51 GMT, Jul 12, 2018 | Published: 11:51 GMT, Jul 12, 2018 |
0 Comments
1046
This post was written by : Litharsan

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்த வெளிநாட்டவர் படகு திருத்தச் சட்டம் மற்றும் இழுவைப்படகு தடைச்சட்டம் என்பவற்றைப் பயன்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் செயலாளர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாம் இந்தியாவிடம் கையேந்தவேண்டிய தேவையில்லையெனவும் கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் விரிவாக கலந்துரையாடினோம்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிகளில் ஈடுபடுவதுடன் தடைசெய்யப்பட்ட இழுவைப்படகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்திய அரசாங்கம் இழுவைப் படகுத் தொழில் தீங்கு விளைவிக்கும் என்பதனை ஏற்றுக்கொண்டு, இந்திய இழுவைப்படகுத் தொழிலாளர்களை மாற்றி, வேறு தொழில் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்வோம் தெரிவித்தது.

ஆனால் எமக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இந்தியா எம்மைப் பலமுறை ஏமாற்றி விட்டது.

எனவே கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இழுவை படகு தடைச்சட்டத்தினையும், அதேபோல் இவ்வருடம் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டவர் படகுகள் திருத்தச் சட்டத்தினையும் பயன்படுத்துங்கள் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)