Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் நடவடிக்கை குறித்து இந்தியா கவலை!

In இந்தியா
Updated: 11:37 GMT, Jul 12, 2018 | Published: 11:37 GMT, Jul 12, 2018 |
0 Comments
1171
This post was written by : Kemasiya

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான உரிமையை சீன நிறுவனம் பெற்றுள்ளமைக்கு இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை கட்டும் ஒப்பந்தத்தை சீன நிறுவனமொன்று பெற்றுள்ளது.

இலங்கையின் தென்பகுதியில் ஏராளமான சீன நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயத்திற்கு இந்தியா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுக விரிவாக்கத்திற்கும் சீனா பங்களிப்பு வழங்கி வருவதையும் இந்தியா நினைவுபடுத்தியுள்ளது.

இது குறித்து இந்தியா ஏற்கனவே இலங்கையிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ள நிலையில், தற்போது வீடுகளை அமைக்கும் பணியும் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடக்கு கிழக்கில் இந்திய அரசு வீடுகளை கட்டி வரும் நிலையில், தற்போது சீன நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளமைக்கு இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)