Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படுகொலை செய்யப்பட்ட நவோதயா கிருஷ்ணாவின் இறுதிக் கிரியை!

In இலங்கை
Updated: 12:13 GMT, Jul 12, 2018 | Published: 12:13 GMT, Jul 12, 2018 |
0 Comments
1116
This post was written by : Risha

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதயா மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபாநந்தனின் இறுதிக் கிரியைகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றன.

நவோதய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல், அங்கிருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் ஊர்வலமாக கொழும்பு மாநகர சபைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அன்னாரின் பூதவுடல், அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக செட்டியார் தெருவில் அமைந்துள்ள அன்னாரின் வர்த்தக நிலையம் வாயிலாக மாதம்பிட்டி மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அண்மைக்காலமாக மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வந்த கிருஷ்ணா, கடந்த 9ஆம் திகதி இனந்தெரியாதோரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)