Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பதை அரசாங்கம் நிறுத்தவேண்டும் – பிரசன்ன ரணவீர

In இலங்கை
Updated: 16:09 GMT, Jul 12, 2018 | Published: 12:55 GMT, Jul 12, 2018 |
0 Comments
1064
This post was written by : Litharsan

நாட்டு மக்களுக்கு வரிச்சுமையை அதிகரிக்கும்வகையில் செயற்படுவதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ளவேண்டுமென ஒருங்கிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

பொரளை என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “எரிபொருள் விலையேற்றத்துடன் மூன்று விடயங்கள் தொடர்பில் இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளது.

2015 இல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற பிரசாரக் கூட்டங்களில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடந்த அரசாங்க கால எரிபொருள் விலை தொடர்பில் பாரியளவிலான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இவ்வாறான குறைப்பாடுகளை இல்லாதொழிப்போம் என்று மக்களுக்கு உறுதிமொழி வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால், இதுவரை இந்த அரசாங்கம் செய்தது என்ன? அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இணைந்துத் தான் எரிபொருள் விலையை தற்போது அதிகரித்துள்ளார். இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் உணர்ந்து விட்டார்கள். மறுபுறத்தில், அரசாங்கத்தில் ஒற்றுமையில்லாத நிலைமையும் காணப்படுகிறது.  நிதியமைச்சர் அதிகரித்த எரிபொருள் விலையேற்றத்தை அடுத்த நாள் தான் ஜனாதிபதி பத்திரிகையின் ஊடாகத் தெரிந்துகொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து பெற்றோலிய வளத்துறை அமைச்சருடன் இணைந்து ஜனாதிபதி விலைக்குறைப்பில் ஈடுபட்டார். பின்னர் தற்போது எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு குழப்பமான போக்கிலே அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதனைப் பார்க்கும்போது, இனியும் இந்த அரசாங்கத்தினால் முன்னோக்கி செல்லமுடியாது என்பது தெளிவாகியுள்ளது. எனவே, இனிமேலும் நாட்டு மக்களுக்கு வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும் வகையில், வரிச்சுமையை ஏற்படுத்த வேண்டாம் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)