Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற மேல்சபைக்கு ஜனாதிபதி தலைமையில் நால்வர் பதவியேற்பு

In இந்தியா
Updated: 10:22 GMT, Jul 14, 2018 | Published: 10:22 GMT, Jul 14, 2018 |
0 Comments
1023
This post was written by : Kemasiya

இந்திய நாடாளுமன்ற மேல்சபையிலிருந்த நான்கு பதவி வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், இன்று (சனிக்கிழமை) நால்வரும் நியமிக்கப்பட்டுள்னர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தலித் இனத்தவரும் விவசாயிகள் சங்க தலைவருமான ராம் ஷகல், ஆர்.எஸ்.எஸ். இயக்க முன்னோடியும், டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மோதிலால் நேரு கல்லூரி பேராசிரியருமான ராகேஷ் சின்ஹா ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ராம் ஷகல் ஏற்கனவே நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணியாற்றியவராவார்.

மேலும், கற்சிற்பக்கலை வல்லுனரான ரகுநாத் மோஹாபத்ரா, பிரபல நாட்டியக் கலைஞரும் நடனக் கலை ஆசிரியையுமான சோனால் மான்சிங் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ரகுநாத் மோஹாபத்ரா பூரி ஜகநாதர் ஆலயத்தின் பழங்கால சிற்பங்களை பொலிவூட்ட அரும்பணியாற்றியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)