Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலிபானின் முக்கிய ஆதரவாளராக அமெரிக்கா செயற்படுகிறது: ரஷ்யா

In ஐரோப்பா
Updated: 11:24 GMT, Jul 14, 2018 | Published: 11:23 GMT, Jul 14, 2018 |
0 Comments
1030
This post was written by : Risha

ஆப்கானஸ்தானின் தலிபான் போராளிகளுக்கான முக்கிய ஆதரவாளர்களாக அமெரிக்க இராணுவம் செயற்படுவதாக, ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

டக்ஃபிரி போராளிகளுக்கு ரஷ்யா ஒத்துழைத்ததாக அமெரிக்காவின் முந்தைய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ரஷ்யா தலிபானுடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புகளை பேணி வருகிறது. ஆனால், அது நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஆப்கானுடனான சமரச நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்குமானதாகும்.

ஆனால், தலிபானுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவது தொடர்பாக ஏற்கனவே பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

ஆப்கானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் செயற்பாட்டின்போது போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் கடுமையாக அதிகரித்துள்ளன.

அமெரிக்கா தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பல ஆய்வுகள் அதற்கு சான்று பகர்வனவாக அமைந்துள்ளன” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)