Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமற்போனோர் விடயத்தில் அரசின்மீது நம்பிக்கையில்லை: சிவில் சமூகம் குற்றச்சாட்டு!

In இலங்கை
Updated: 11:27 GMT, Jul 14, 2018 | Published: 11:27 GMT, Jul 14, 2018 |
0 Comments
1041
This post was written by : Ravivarman

காணாமற்போனோரின் உறவினர்களிற்கு அரசு மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அமைப்புக்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலைமை காணப்படுவதாக காணாமற்போனோர் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலகத்திடம் யாழ். மாவட்ட சிவில் சமூகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் யாழ். மாவட்ட சிவில் சமூகத்திற்குமிடையில் விசேட சந்திப்பொன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதன்போதே காணாமற்போனோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் காணாமற்போனோர் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலகத்தின் அதிகாரிகளிடம் மேற்படி விடயத்தினை எடுத்துக் கூறியுள்ளனர்.

மேலும் இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த காணாமற்போனோரின் உறவினர்கள், காணாமற்போனோர் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலகத்தின் மீது நம்பிக்கை இல்லையென்றும் குறித்த செயற்பாடுகள் தொடர்ந்தும் தம்மை ஏமாற்றும் செயல் எனவும் குறிப்பிட்டனர்.

மேலும் காணாமற்போனோரின் உறவினர்களில் ஒரு பகுதியினர் இந்தச் சந்திப்பை புறக்கணித்த அதேவேளை மற்றுமொரு பகுதியினர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)