Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

வீச்சு

143 Views

திருந்தாத தலைமைகளினால் தவிக்கிறது தமிழினம்..
அனைவருக்கும் வணக்கம்,

ஆதவன் இணையத்தளத்தில் ஞாயிறு தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் “சிறப்பு ஞாயிறு” பகுதிக்கு வாரத்திற்கு வாரம் அதிகரிக்கின்ற வாசர்களின் வருகை மனநிறைவை தருகின்றது - மேலும் விடயங்களை வாரி வழங்க வேண்டும் என்ற வேட்கையை ஊட்டுகின்றது. முதலாவது வாரத்தில் கூறியதுபோன்று புதிய புதிய விடயங்களை உள்ளடக்குவதற்கான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.

அதனால், அடுத்த வாரத்தில் இருந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும், கேள்வி பதில் பகுதி ஒன்றை இணைத்துக் கொள்ள தயாராகி இருக்கின்றது ஆதவன். அதில் வழங்கப்படுகின்ற பதில்கள் சுவாரஸியமாகவும் வாசகர்களை பகிடி பண்ணி சிரிக்க வைப்பவையாகவும் இருக்கின்ற அதேவேளை சிந்திக்க துாண்டுபவையாகவும் இருக்கும்.

இந்தப் பகுதியில் உங்களின் கேள்விகளும் இடம்பெற வேண்டும் என்பதே ஆதவனின் விருப்பம். நிச்சயமாக உங்களின் விருப்பமாகவும் அதுவே இருக்கும். எனவே, உங்கள் மனங்களில் தோன்றுகின்ற கேள்விகளை ஆதவனின் முகவரியான, [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் - ஆர்

......

இலங்கையில் தமிழ் மக்களே தமது உரிமைகள் மறுக்கப்படுவதையும், மனித உரிமைகள் மீறப்படுவதையும் ஐக்கிய நாடுகள் சபையில் வெளிப்படுத்தி போராடி வந்திருக்கின்றார்கள். இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது மாநாட்டில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களும் இலங்கையில் தமக்கு எதிராக நடைபெறுகின்ற இன ரீதியான வன்முறைகளை ஐக்கிய நாடுகள் சபையில் ஒலிக்கச் செய்திருக்கின்றார்கள்.

கண்டியில் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் திட்டமிடப்பட்டதாகவும். 1983ஆம் அப்போதைய ஆட்சியாளர்களாலேயே தமிழ் மக்களுக்க எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுக்கு ஒப்பான வன்முறையாகவே கண்டியில் நடந்த வன்முறைகளும் நடந்துள்ளன என்பதே முஸ்லிம் மக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக புரியப்பட்ட வன்முறைகள் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை கூர்மைப்படுத்தியது. ஆனால் முஸ்லிம்கள் தமது கோபத்தையும். விமர்சனத்தையும் ஆயுதம் ஏந்தி வெளிப்படுத்தாமல் நேரடியாகவே சர்வதேச அரங்கில் எடுத்தக் கூறி தாம் எதிர் கொண்டிருக்கும் அச்சத்தையும், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் இராஜதந்திர ரீதியாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

என்னதான் அரசியல் வேறுபாடுகளும். கருத்து முரண்பாடுகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே இருந்தாலும், தமது இனத்துக்கு பிரச்சினை ஒன்று வருகின்றபோது, அதற்கு எதிராகவும் - அதனை கையாள்வதற்கு ஒன்றுபட்டு நிற்கின்ற பாங்கும்  வரவேற்புக்குரியதாகும்.

துரதிஷ்ட்டவசமாக தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியில் இன நலனுக்காக ஒற்றுமைப்படும் ஒழுக்கம் எப்போதும் இருந்ததில்லை. அது அகிம்சை வழிப்போராட்டத் தலைமைகளிடமும் இருந்ததில்லை. ஆயுத வழிமுறையில் போராடிய தலைமைகளிடமும் அந்த நாகரீகள் இருந்ததில்லை. பரஸ்பர நம்பிக்கை என்ற வார்தையை தமிழ் தலைமைகள் மருந்துக்கும் பாவிப்பதில்லை.

அரசியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும், வேற்றுமையிலும், ஒரு ஒற்றுமையை எவ்வாறு காண்பது என்பதை தமிழ்த் தலைமைகள், முஸ்லிம் தலைமைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு இனத்தின் அரசியல் தலைமைகள் எனப்படுவோர் தமது இனத்தின் பாதுகாப்புக்காகவும், உரிமைகளுக்காகவும், கௌரவமான வாழ்வியலுக்காகவும் எவ்விதமாக அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றார்கள் என்பதையும் மற்றவர்கள் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

துரதிஷ்டவதமாக ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில்கூட தமிழர்கள் பல அணிகளாக பிரிந்து நின்று கொண்டு ஆளுக்கொரு கோட்டு சூட்டையும் போட்டுக்கொண்டு தமிழருக்காக குரல் கொடுக்கின்றோம் என்று உப அமர்வுகளில் கலந்து கொள்ளும் அனுமதியைப் பெறுவதற்காக அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அணியினர் மண்டபத்திற்குள்ளே இருக்கின்றார்கள் எனறால், “அவர்கள் துரோகிகள் நாங்களே உண்மையான பிரதிநிதிகள்” என்று வாதிட்டு, வெள்ளைக்காரனுக்கே வியர்துப்போகச் செய்யும் செயற்பாடுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் முன்றலில் தமிழ் மக்களுக்காக பிரசன்னமாகி இருக்கும் அனைத்தத் தமிழர்களும் ஒன்று திரண்டு விழிப்புணர்வு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினால் அது நிச்சயமாக மனித உரிமைப் பேரவையில் எதிரொலிக்கும் என்றும், தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தும் என்றும் பல நாட்டுப் பிரதிநிதிகளும், தொண்டு அமைப்புக்களும் எடுத்துக் கூறினாலும் நம்மவர்களிடம் எதுவித மாற்றத்தையும் காணமுடியவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் முடியும்வரை ஒவ்வொரு உபக்கழுக்களின் அமர்வுகளில் இருந்தும் உணர்ச்சிபூர்வமான அறிக்கைகளை வாசித்தவிட்டு வருவதைத் தவிர இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த பலாபலன்கள் இதுவரை எதுவுமாக இருக்கவில்லை - இருக்கப் போவதுமில்லை.

ஐ.நா. அமர்வுகள் முடிந்ததும் தமது திருவிழாக்கடைகளை பூட்டிக்கொண்டு தாயகம் திரும்பிவிடுவார்கள். இப்படித்தான் தொடர்ந்து தமிழ்த் தலைமைகள் எனப்படுவோர் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளுக்கும், அது தீராமல் இருப்பதற்கும் மூல காரணம் ஒற்றுமையில்லாத தமிழர்களின் வெட்டி ஓடும் செயற்பாடுகளே என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது. ஆனால்,  திருந்துவது தொடர்பில் யாரும் சிந்திப்பதாககூட தெரியவில்லை. இதுதான் தமிழனத்தின் சாபக்கேடு!

தமிழ்க் கட்சிகள் பயனற்ற தமது செய்பாடுகளை ஒரு பக்கமாகத் தொடர்ந்துகொண்டு இருக்கையில் தென் இலங்கை சிங்களக் கட்சிகளோ மீண்டுமொரு ஆட்சி மாற்றத்திற்கான திரை மறைவுச் செயற்பாட்டில் மீண்டும் தீவிரமாக செயற்பட்டக்கொண்டு இருக்கின்றன.

நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை எனும் ஆபத்திலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தற்காலிகடாக பாதுகாத்தது கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த வன்முறைகளைத் தொடர்ந்து நம்பிக்கை இல்லாப் பிரேரணையை ஒத்திப் போட்டிருந்த பொது எதிரணியானது மீண்டும் அந்த முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே ஐக்கிய தேசியக் கடசிக்குள் கருத்து முரண்பாடு காரணமாக கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தேசிய அரசு ஒன்றுக்கான முயற்சிக்கு ஆதரவு அளிப்பதற்கு தாயாராக இருப்பவர்களையும், சுதந்திரக் கட்சியனரையும். முஸ்லிம் கட்சிகளையும், தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய தேசிய அரசொன்றை ஏற்படுத்தவதற்கான முயற்சிகள் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாகவும் விரையில் அரசியல் பரபரப்பான நிழச்சிகள் நடந்தேறும் என்றும் தெரியவருகின்றது.

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே வளர்ந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளுக்கு விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருத்தமான நடவடிக்கை ஒன்றின் ஊடாக பதிலளிப்பார் என்றும், புதிய அமைச்சரவையானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமையப்பெற்றதைப்போன்று அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மீண்டுமொரு வீச்சி சந்திக்கும் வரை நன்றி -