Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடா

In கனடா
May 20, 2018 6:16 am gmt |
0 Comments
1028
கனடா ரொறன்ரோ – யோங் க்ளூஸ்ட் ஸ்ட்ரீட் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கத்திக் குத்துச் சம்பவத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 1:30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த கத்திக் குத்தில்...
In கனடா
May 20, 2018 5:45 am gmt |
0 Comments
1028
ரொறன்ரோ லோரன்ஸ் ஹைட்ஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் படு காயமடைந்த இளைஞரின் உடன் நிலை தற்போது முன்னேற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதில் படுகாயமுற்ற நபர் அந்த பகுதியில் நின்ற...
In கனடா
May 19, 2018 4:15 am gmt |
0 Comments
1027
ஒன்ராறியோவில் சக்திவளப் பாதுகாப்பு திட்டங்களுக்காக, சுமார் 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்க ஒன்ராறியோ பசுமைக் கட்சி தீர்மானித்துள்ளது. ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஒன்ராறியோ பசுமைக் கட்சி வெளியிட்டுள்ள தனது தேர்தல் அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்ப...
In கனடா
May 19, 2018 4:14 am gmt |
0 Comments
1032
கனடாவில் எதிர்வரும் தினங்களில், சில பகுதிகளில் எரிபொருளின் விலை அதிகரிப்பினை காணவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பாகங்களிலும விலை அதிகரிப்பின் அளவு வேறுபட்டுக் காணப்படும் எனவும், அந்த வகையில் ஒன்ராறியோ, மரிட்டைம்ஸ், மனிட்டோபா, சாஸ்காச்சுவான் ஆகிய மாநிலங்களிலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற...
In கனடா
May 19, 2018 4:08 am gmt |
0 Comments
1024
காசா எல்லையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இவ்வாறு பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிக மோசமான பலப் பிரயோகத்தினையும், போர் ஆயுதப் பயன்பாட்டினையும் ஒருபோதும் மன்னிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் குறித்த இ...
In கனடா
May 19, 2018 3:51 am gmt |
0 Comments
1021
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு தொண்டு நிறுவனம் ஒன்றின் முக்கிய அதிகாரியான கனேடியருக்கு, 13 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. தலைநகர் காத்மாண்டுவுக்கு அருகே உள்ள நகர் ஒன்றில் இடம்பெற்றுவரும் நீதிமன்ற சிறப்பு விசாரணைகளின் பின்னர், இதுகுறித்த தீர்ப்பு அறிவிக்கப்படுமெ...
In கனடா
May 19, 2018 3:41 am gmt |
0 Comments
1026
சீக்கிய பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பில் கனடா அவதானம் செலுத்த வேண்டுமென, இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நாவுக்கான இநதியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை களைவது தொடர்பில் கனடா முன்னே...
In கனடா
May 18, 2018 11:23 am gmt |
0 Comments
1028
நமது கொள்கைக்கு மாறான கொள்கையுடைய லிபரல் கட்சியுடன் நாம் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என, புதிய சனாநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத் தெரிவித்துள்ளார். தேர்தலில் முற்போக்கு பழமைவாதக் கட்சி அதிக வாக்குகளை பெற்றுவிட்டால், லிபரல் கட்சியும், புதிய சனநாயக கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்று க...
In கனடா
May 18, 2018 11:17 am gmt |
0 Comments
1025
சனநாயக கட்சியுடன் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து, இவ்வளவு முற்கூட்டியே கருத்து கூற முடியாது என ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார். தேர்தலில் முற்போக்கு பழமைவாதக் கட்சி அதிக வாக்குகளை பெற்றுவிட்டால், லிபரல் கட்சியும், புதிய சனநாயக கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்குமா என்று கேள்விக்கு பத...
In கனடா
May 18, 2018 10:55 am gmt |
0 Comments
1024
எயார் கனடா நிறுவனத்தின் விமான டிக்கட் பதிவு செய்யும் இணைய தளத்தில், தாய்வானின் தலைநகர் தாய்பேவை, சீனாவின் ஓர் பகுதியாக வெளியிட்டுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. தாய்வானின் வெளிவிவகார அமைச்சு, எயார் கனடா விமான சேவைக்கு அதிகாரபூர்வமாக இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பிழையானது எனவும...
In கனடா
May 18, 2018 10:26 am gmt |
0 Comments
1027
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதன் ஒரு கட்டமாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் கனடாவிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுகள் மார்க்கம் நகர மண்டபத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது....
In கனடா
May 15, 2018 1:06 pm gmt |
0 Comments
1028
மிசிசாகாவின் டெர்ரி வீதி மற்றும் கொரிவே டிரைவ் பகுதியில் அமைந்துள்ள, பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த கொள்ளையில் எத்தனை பேர் தொடர்பு பட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட விபரங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், சம்பவம் த...
In கனடா
May 15, 2018 12:55 pm gmt |
0 Comments
1028
ஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கான மக்களின் ஆதரவு குறித்து கருத்து கணிப்பொன்று இடம்ப...
In கனடா
May 15, 2018 12:04 pm gmt |
0 Comments
1025
கனேடிய மனிதாபிமானப் பணியாளர் பீட்டர் டால்லிஷ் மீது, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நல்லெண்ண அடிப்படையில் பீட்டர் டால்லிஷ்க்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது, அங்கு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்ட போதே அவர் இந்த குற்...
In கனடா
May 14, 2018 12:00 pm gmt |
0 Comments
1042
தொழிலாளர் சந்தையில், ஊழியர்களுக்கான ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, கனேடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கனடாவின் தொழிற்சந்தை ஓரளவு சிறந்த மட்டத்தினை தொட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில காலங்களுக்கு வேலை வாய்ப்புகளில் கணிசமான அதிகரிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அரிது எனவும்...