ஒன்ராறியோ மாநிலத்தின் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், லிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் அனைத்தும் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவரான டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி, ஆட்சி அமைத்தால்...
ரொறன்ரோ கிழக்கில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில், படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
கனடாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.9 வீதம் குறைவடைந்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அனைத்துலக நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கனடாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் மிதமானதாக இருக்கும் என்ற...
ஒன்ராறியோவின், கெனோராவில் மரையொன்றை விரட்டிய நாயொன்று கைதுசெய்யப்பட்ட சுவாரஸ்ய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நாயை, அதன் உரிமையாளர்கள் நடை பயணம் கூட்டிச்சென்ற போது இடை நடுவே அதனை பிடியிலிருந்து விடுவித்துள்ளனர். எனினும் குறித்த நாய் சுமார் 30 நிமிடங்கள் நரை காணாமல் போயுள்ளது. இதனைதொடர்ந்து, சற்...
ஹம்போல்ட் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக கனடா தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட அனுமதிக்காததால் ஒன்ராரியோ நகர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கம்யூனிட்டி சென்டர் முன்பிருந்த கொடியை மக்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர். இதற்கு அந்நகரத்தின் மேயர் Shaun McLaughlin மறுப்புத் த...
ரொறன்ரோவில் இன்னமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக, ‘ரொறன்ரோ ஹைட்ரோ வண்’ மின்சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. ரொறன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நிலவும் கடுமையான உறைபனி மழை மற்றும், பலத்த காற்றுடன் கூடிய வானில...
ட்ரான்ஸ் மவுண்ரன் எரிபொருள் குழாய் விரிவாக்கத் திட்டமானது, கனடாவின் தேசிய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். ட்ரான்ஸ் மவுண்ரன் எரிபொருள் குழாய் விரிவாகத் திட்டம் தொடர்பில் அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின...
ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி சென்ற எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து, கனடா அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் தற்போது பிரிடிஷ் கொலம்பியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு ஊடகங்கள், குறித்த கப்பலில் தற்போது மிருகங்கள் வ...
கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் வீடு அற்ற 100 பேர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நகர நிர்வாகத்தால் நடாத்தப்படும் தங்குமிடங்களில் தங்கியோர் அல்லது ஒருமுறை அதில் தங்க வந்தோர் என மருத்துவமனைக்க...
கனடாவில் வேலைத் தளங்களில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரித்துவருவதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. கனடாவின் மனித வள நிறுவனம் ஒன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாம் வேலைசெய்யும் இடங்களில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக 17 சதவீதம் பேர் ...
சிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படை தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். பெருவுக்கான மூன்றுநாள் பயணத்தின் முடிவில் தலைநகர் லீமாவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாம் இந்த தாக்குதலுக்கான பலத்த ஆதர...
கனடாவின் கியுபெக் நகரின் பள்ளிவாசலிலுள்ள இஸ்லாமிய கலாசார நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூவேடாவின் அகதிகள் கொள்கையே காரணமென தாக்குதல்தாரி தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி குறித்த கலாசார மையத்தில் புகுந்து அலெக்ஸாண்ட் பிசோனெட் (28 வயது) என...
கனடாவில் தஞ்சமடைந்துள்ள சிரிய மக்கள், கனடாவுக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். தமக்கு ஆதரவளித்ததற்காக இரத்த தானம் செய்து தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர். கனடாவில் ஒட்டாவைச் சேர்ந்த “சமாதான மனிதர்கள்” எனும் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் சிரிய மக்களும் கலந்துகொண்டனர். கனடாவி...
கனடா, ஒன்ராரியோவில் உள்ள ஒரு வீதிக்கு உலகப் பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘அல்லா-ராகா ரஹ்மான் வீதி’ என அந்த வீதிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்து தனது திறமை உழைப்பால் முன்னேறி இன்று உலகளவில் பெருமைபெற்றதுடன் ஒஸ்கார் விருதையும் ஏ.ஆர்.ரஹ்மான் வ...
தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுவரும் வெயித் டிக்கின்சன் எனும் சிறுமி இளவரசர் ஹரியின் திருமணத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார். 15- வயதுடைய ஒன்ராறியோ தெற்கைச் சேர்ந்த பெண் ஒருவர் தொண்டுப் பணிக்கான அதிக மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையிலேயே இவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹரியி...