Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

மைத்திரியிடம் இரகசிய ஆயுதம்! – ரணிலா, மஹிந்தவா சிக்கப் போவது யார்?

இலங்கை சமகால அரசியல் பல்வேறுபட்ட குழப்பநிலைகளுடன் அனைவராலும் உற்றுநோக்கப் படக் கூடிய அரசியல் களமாக உருவாகியுள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதி மற்றும், பொதுத்தேர்தலுக்கான ஆரம்பகட்ட நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அடுத்த பிரதமராகவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதியாகவும் பதவியில் அமர்த்துவதற்காகவே ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் காய்களை நகர்த்திக் கொண்டு வருகின்றனர்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதான நோக்கம் பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்கிவிட்டு தமக்கு சாதகமான ஒரு பிரதமரை அந்த இடத்திற்கு கொண்டுவருவதே மஹிந்த தரப்பினரின் திட்டம் என்ற பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வந்தன.

எனினும் பிரதமரின் சாமர்த்தியம் உட்பட பல்வேறுபட்ட காரணங்களினால் மஹிந்தவின் திட்டம் முறியடிக்கப்பட்டது. என்றாலும் அத்திட்டம் வெற்றியளிக்காவிடினும் கூட மஹிந்த தரப்பின் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேற்றப்பட்டு விட்டது எனலாம்.

இந்தநிலையிலேயே இதுவரைக்காலமும் தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக வெளிப்படையான கருத்துகளை முன்வைக்காத கோட்டாபய, தான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்ததோடு, அதற்காக அமெரிக்கா பிரஜா உரிமையினையும் தூக்கி எறியத் தயார் என்று கூறியிருந்தார்.

மறுபக்கம் மஹிந்தவை பிரதமராகக் கொண்டு வருவதே திட்டம் என்ற வகையிலாக கூட்டு எதிர்கட்சித் தரப்பும் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மஹிந்த தரப்பின் முக்கிய எதிரியான அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போவதாக தெரிவித்தார்.

இவர்களுக்கு இடையில் ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வருவதே ஐக்கிய தேசிய கட்சித் தரப்பின் திட்டமாகக் காணப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தகவல்கள் தற்போதைய அரசியல் நகர்வுகளில் ஓரளவு உண்மைத்தன்மையும் உண்டு. காரணம் ஐக்கிய தேசிய கட்சியின் உட்பூசல்கள் வலுவடைந்துள்ள நிலையிலும், பிரதமருக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையிலும் அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை மாற்றாது தலைமை நாட்காலியை வலுவாக பற்றிக் கொண்டிருப்பது அதனை உறுதிப்படுத்துகின்றது.

காரணம் பிரதமர் தனது அரசியல் எதிர்காலத்தை ஸ்தீரப்படுத்திக் கொள்ளும் முன்னர், அதற்கான காய்களை சரிவர அமைத்துக் கொள்ளாமல் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றுவார் என எதிர்பார்க்க முடியாது.

எது எவ்வாறாயினும், ஜனாதிபதிப் பதவி நாற்காலிக்கு ரணில்,கோட்டாபய, மைத்திரி ஆகியோர் போட்டியிட்டுக் கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக களமிறங்குவார் என்றால் அவரை மிக இலகுவாக தோற்கடிக்க முடியும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் வாக்குகள் கோட்டபாயவிற்கு கிடைக்காது எனவும், அதனால் அவருக்கு வெற்றி கிடைக்காது எனவும் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் இந்தக் கருத்து கோட்டாபய ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடப் போகின்றார் என்பதனை உறுதி செய்து விட்டது.

இவ்வாறு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் களம் சூடுபிடித்துவரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையிலும் குறித்த விடயம் தொடர்பாக மௌனத்தையே கடைபிடித்து வருகின்றார்.

ஏற்கனவே அவர் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மைத்திரி கூறியிருந்ததன் காரணமாக இவ்வாறான மெளனத்தினைக் கடைபிடிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும் மைத்திரிபாலவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களத்தில் போட்டியிடும் வாய்ப்புகள் காணப்படுவதாகவே அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

அவ்வாறாக மைத்திரி, ரணில், கோட்டாபய தேர்தல் களத்தில் மோதிக்கொள்ளும் தருணத்தில பல குழப்பங்களை எதிர்பார்க்க முடியும். முக்கியமாக பல இரகசியங்கள் அம்பலமாகும் வாய்ப்புகளும் உண்டு.

ரணில் மற்றும் மைத்திரி தரப்பு இப்போதைக்கு கடந்த கால அதாவது மஹிந்த தரப்பு மீது உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு அடுத்த தேர்தல் களம் உதவியைச் செய்யலாம் என்பதே எதிர்பார்ப்பு.

உதாரணாக மைத்திரி – ரணில் நல்லாட்சி அமைத்து பதவிகளில் அமர்ந்த பின்னர் முதலாவது வருட நிறைவின் பின்னர் “என்னை எதிர்ப்பவர், எனக்கு எதிராக கட்சிகளை அமைப்பவர்களின் இரசியங்களை அம்பலமாக்கி வீதியில் அலைய விடுவேன்” என மைத்திரி கூறியிருந்தார்.

எனினும் மஹிந்தவின் புதுக் கட்சிக்கு எதிராக அவர் விடுத்த எச்சரிக்கையாக இது ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் நாளடைவில் மைத்திரிஅந்த இரகசியத்தை இரகசியமாகவே வைத்துக் கொண்டார் இது வரையிலும் வெளிப்படுத்த வில்லை.

காரணம் ஒருவேளை அவரும் பிரச்சார பீரங்கியாக இருக்கலாம், அல்லது அவர் இரகசியங்களை அம்பலப்படுத்த தக்க தருணம் இது வரையிலும் அமையாது இருக்கலாம். அவ்வாறெனில் மைத்திரியிடம் உள்ள இரகசியம் அடுத்ததேர்தல் காலத்தில் பிரயோகிக்கப்படும் முக்கிய ஆயுதமாக காணப்படும் என்பதே வெளிச்சம்.

அந்தவகையில் அடுத்த தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்சர்களுக்கான ஆபத்து காத்திருக்கின்றது எனலாம். ஆனாலும் மஹிந்த தரப்பு நேரடிதேர்தலுக்கு அறைகூவல் விடுப்பதுதான் இதில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

எது எப்படியானாலும் இனிவரும் அரசியல் ஆட்டங்கள் மிகவும் அதிர்வுகளைக் கொண்டதாக அமையும் இதில் மஹிந்த எனும் சுனாமியிடம் மைத்திரி ரணில் சிக்குவார்களா? அல்லது மைத்திரி புயலிடம் மஹிந்த சிக்குவாரா? இரண்டுமே இல்லாமல அரசியல் ராஜதந்திரி ரணிலிடம் இருவரும் சிக்குவார்களா என்பதே இப்போதைய முக்கிய கேள்வி…..

சகோதரப் பார்வை

மைத்திரியிடம் இரகசிய ஆயுதம்! – ரணிலா, மஹிந்தவா சிக்கப் போவது யார்?

மைத்திரியிடம் இரகசிய ஆயுதம்! – ரணிலா, மஹிந்தவா சிக்கப் போவது யார்?

ரணிலுக்கு ஆபத்து! – மோதிக்கொள்ளும் பொன்சேகாவும், கோட்டாவும்…

பீதியடைய வைத்த இனக்கலவரமும்.. பின்னணியில் உள்ள சக்திகளும்!

மைத்திரியின் எதிர்காலமும், ஏமாற்றப்படும் இலங்கையர்களும்…

நடுக்கத்தில் ராஜபக்ஷ…. பாயப்போகும் முக்கிய ஆயுதம்!