Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

டவுட் கிளியர்....

டவுட் :- இளைஞர் மாநாடு ஒன்றைக் கூட்டவுள்ளதாக அறிவித்துள்ளாரே, வட மாகாண முதல்வர் சி.வி,விக்னேஸ்வரன் அவர்கள்…?
– வரதகுமார் கோப்பாய்

கிளியர் :- இளைஞர்களை அணி திரட்ட ஒரு இளைஞன் இல்லாத நிலைக்கு  தள்ளபட்டுவிட்டதா…? தமிழ் இளைஞர் சமுதாயம். என்கின்ற கேள்வியே எழுகிறது.


டவுட் :- மைத்திரி – ரணில் கூட்டாட்சி அதன் பதவிகாலம்(2020) முடியும் வரை தொடருமா ஆண்டாள்…?
-மங்கை நல்லூர்

கிளியர் :- “நித்திய கண்டம் பூரண ஆயுசு” என்கின்ற முது மொழிதான் நினைவுக்கு வருகிறது.


டவுட் :- இஸ்லாமிய பெண்கள் அவர்களது கலாசார உடை எனப்படும் அபயா (Abayaa) உடையை அணிந்துதான் பாடசாலைக்கு வரவேண்டும் என எழுப்பப்பட்டுள்ள சர்ச்சை குறித்து.
கணபதி திருகோணமலை

கிளியர் :- பொது இடங்களில் அந்த இடங்களின் நடை முறைதானே,  கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்கிறனர்  யதார்த்தவாதிகள்.
இந்த அபாயா என்கின்ற சொல் அபாயம் என்கின்ற தமிழ் சொல்லில் இருந்து மருவி வந்ததோ!!!! என்கின்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது இந்த விவகாரம்.


டவுட் :- என்னதான் நடக்கிறது சிரியாவில்…?

-முகமது இஸ்மயில் கொழும்பு

கிளியர் :- எண்ணை வளம் மிக்க மற்றொரு நாடு ஆக்கிரமிக்கப் பட்டு இரசாயன ஆயுதத் தாக்குதல் நடாத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது  அரசாங்கதுக்கும், IS போன்ற அரச எதிர் பயங்கர வாதிகளுக்கும், ரசியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களை விற்பதுடன்  நேரடியாகவும் தாக்குதலில் ஈடுபடுகின்றன. பயங்கர வாத அழிப்பு என்கின்ற தலைப்புடன் ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,எகிப்த்து etc… வரிசையில் மறொரு  நாடு அழிக்கபடுகிறது. மக்கள் அகதிகள் ஆகின்றனர். முடிவில் மக்களற்ற வெற்றுத் தரையில் பொம்மை ஆட்சி ஒன்று அமைக்கபட்டு வளங்கள் வசமாகப்படும். இதுதானே வழமை.


டவுட் :- ஸ்ரீ தேவி மரணம் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப் படுகின்றனவே…?
-பரமேஸ்வரி   கொட்டக்கலை

கிளியர் :- மேல் தட்டு வாழ்கையின் நதி மூலங்கள் வெளி வருவதில்லை. வந்தாலும் உறுதி ஆவதில்லை. மொத்தத்தில் யதார்த்தமான ஒரு நடிகையை கலை உலகம் இழந்து விட்டதுஅவ்வளவுதான் .


டவுட் :- புதிய அரசியல் அமைப்பு அதநூடான இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் அரை வாசித் துரம் தாண்டி விட்டோம் என்று சொன்னாரே திரு,சுமந்திரன் உண்மையா…?
-நகுலேஸ் யாழ்ப்பாணம்

கிளியர் :- அரைக்  கிணறு தாண்டின கதை தான் அது.


டவுட் :- மரண தண்டனை,என்கவுண்டர் இரண்டுக்கும் என்ன வேறுபாடு.
-குகன் பிரான்ஸ்

கிளியர் :- முன்னரே தீர்மானித்து திகதி குறித்து கொல்வது மரணதண்டனை,முன்ன்னரே திட்டமிட்டு திடீரென கொல்வது என்கவுண்டர். ஆக இரண்டுமே கொலைதான்.


டவுட் :- கிளிநொச்சி மாவட்டத்தில் கசிப்பு, கள்ளச்சாராய பாவனை அதிகரிப்பதால்  மதுபானக் கடைகளுக்கு அரச அனுமதி வேண்டும் என்கிறாரே நாடாள மன்ற உறுப்பினர் திரு ஸ்ரீதரன் அவர்கள்…
-றியனா அக்கரைப் பற்று.

கிளியர் :- தற்கொலைகள்,பாலியல் வன்கொடுமைகள் என்பனவும் அங்கு அதிகம் இடம் பெறுகின்றனவே…? இவற்றிற்க்கான பரிகாரமாக என்னத்தை கேட்கப் போகிராரோ!!!!


டவுட் :- இலங்கை அரசியலின் எதிர்காலம்…?
-பிரதாபன்  முல்லைதீவு

கிளியர் :- அரசியலும்  அரசியல் வாதிகளின் வாழ்வும்  செளுமையாகத்தான் இருக்கிறது,இருக்கும். மக்கள்தான் தொடர்ந்தும் மாக்கள் ஆக்கப் பட்டுக் கொண்டிருகிறார்கள்.  பிராந்திய நலன் சார் அந்நிய ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. சர்வதேச ஆடுகளமாகும் நிலை தொடர்ந்தால்   இலங்கைக்கு என்று சுயமான ஒரு அரசியல் இருப்பதே கேள்விக் குறியாகி விடும்.


டவுட் :- உலக தொழலாளர் தினத்தை மே7ம்           திகதிக்கு மாற்றி அனுஸ்ட்டித்ததே  இலங்கை அரசு…?
-சுதன்ராஜ் கொழும்பு

கிளியர் :- இன்றைய உலகில் மே தினம் என்பது அரசியல் கட்சிகளின் பலத்தை காண்பிக்கும் வகையிலும்,ஒரு விடுமுறை கேளிக்கையாகவும் மாறி வரும் நிலையில் திகதியில் என்ன இருக்கப் போகுது.


டவுட் :- வட,தென் கொரிய அதிபர்கள் சந்தித்த வேளை உங்கள் மனதில் என்ன தோன்றியது ஆண்டாளே …?
-மகேஷ் மன்னார்

கிளியர் :- பிரிந்தவர்கள் இணைவதற்கான சூழல் உருவாகிறது அங்கே,இணைந்து இருப்பவர்கள் பிரிவதற்கான சூழலே வலுக்கிறது இங்கே என எண்ணி மன வருந்தம்  தான் ஏற்ப்பட்டது.


 டவுட் :- அமெரிக்க அதிபர்  டோணால்ட் ட்றம்ப் தொடர்ந்தும் பெண்கள் பற்றிய  கீழ்தரமாக கரு த்துக்களை வெளியிடிடுகிறாரே…?
நிமால்  பாரிஸ்

கிளியர் :- பெண்கள்,  பாலியல் இச்சைகளை போக்கும் போதைப்  பொருட்கள் என பகிரங்கமாகவே பீற்றிய ஒருவரிடம் அரசியல் ஞானத்தையா…?


டவுட் :- தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காக  தனது கொள்கைகளை கை விட்டுவிட்டே EPDPயின் ஆதரவை பெற்றுள்ளது என கூறுகினாரே வடமாகான முதல்வர்…?
-வடிவேல் சுன்னாகம்

கிளியர் :-TNAயின் கொள்கைகளிற்க்கும் EPDPயின் கொள்கைகளிற்கும்  இடையில் என்ன வேறுபாடுகளை காண்கிறார் முதல்வர் என புரியவில்லை. சமஸ்டி என்கிறது TNA,அதனையேதான் மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி என்கிறது EPDP,இரண்டும் இணக்க அரசியலேயே செய்கின்றன.


டவுட் :- மே 18 நினைவேந்தல் நிகழ்வு யார் நிகழ்ச்சி நிரலின்படி நடப்பது,யார் தலைமையின் கீழ் நடப்பது என்கின்ற  போட்டி பற்றி.
-செழியன் பரந்தன்

கிளியர் :- மண்ணுக்காய் மரணித்தவர்களின் நினை வேந்தலில் குளிர் காய நினைப்பவர்கள் அதே மண்ணுக்காய் தமது வாழ்வை இழந்து வாழ்பவர்களை வாழ்வித்தலே மரணித்தவர்களுக்கான நினைவேதல் என்பதனை உணர்வார்களா…?

WEEKLY SPECIAL

இப்போது தனியாக….

இப்போது தனியாக….