Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

அய்யோ.... கடவுளே!!

என்னடா மொறைக்குற..
அப்பால போடா
அநாதைச் சனியா..
பெத்து விட்டாங்களா?
இல்ல தத்து விட்டாங்களா?
இங்க வந்து மூஞ்சிய காட்டுற….
இந்தத் துற்றல் எனக்குதான்..
பெற்றுக்கொண்டேன்…
என்ன நடந்தது? நிமிடத்திற்கு முதல்….
……………………………
சாலையோரம்.. அரவமற்ற பகுதி..
ஆசையாய் இருந்தது மயான அமைதி…
கடிகார முள் சந்தமும்
இதமாய் ஒலிக்கும்.. அது  கேட்க
கையில் கடிகாரம் இல்லை…
அத்துணை அமைதியது..
இதமாய் இருந்தது …
ஆறுதலாய் இருந்தது… அதனால்
சாலையோர நாற்காளிக்கு
பாரமானேன்…
என்ன நடந்தது? மணிக்கு முதல்?
……………………………………
கொடுமையிலும் கொடுமை
வயிற்றுக் கொடுமை..
ரெண்டு நாளாய் காணவே இல்லை..
கெட்டுப்போன சாப்பாடு கூட..
நொந்து நடந்தபோது..
சொட்டு சொட்டாய் ஒழுகிய
ஒற்றைக் குழாய் ஒன்று கண்டேன்…
வாயை அதற்கு பரிசளித்து..
வயிரான உண்டேன்…
தண்ணீரை….
இதுதான் நடந்தது மணிக்கு முதல்…
…………………………………………………..
உண்ட உணவு சட்டென
செமிக்க… கொஞ்சமாய்
தலை சுற்றியது…. நடந்து வந்தேன்..
மனதில் ஓர்  பாரம்
எனக்கு யாரும் இல்லையே ..!!
சாலையோர அரவற்ற பகுதி..
ஆருதலாய் அமைய
அமைதி கண்ட நான்
தெருவோர நாட்காளிக்கு
பாரமானேன்…..
அமைதியாய் இருந்தது..
இதமாய் இருந்தது…-

துரத்தே புழுதி
கிளப்பியவாறு ஓர் ஒய்யார வண்டி…
அருகே வரும்போது..
தெரிந்தோ தெரியாமலோ…
உமிழ்ந்து விட்டான் அவன்…
என் முகத்தில் …!!
கந்தல் உடை…. என்அங்கம்
தெரியும் அசிங்கமாய்…
அதுவே சொல்லியது அவனுக்கு
அநாதை நான் என்று…

கிடைத்தது பரிசு …
“என்னடா மொறைக்குற அப்பால போடா
அநாதைச் சனியா..”
இது தான் நடந்தது..
கொஞ்சம் முதல்..

சத்தியமாய் நான் மொறைக்கல..
முகம் கழுவ வேண்டுமே
நடக்கவேண்டுமே?
அப்போது பசித்து விட்டால்..
அய்யோ…. கடவுளே!!
என் செய்வேன் நான்?
அதைத்தான் சிந்தித்தேன்…..
அநாதை நான் என்பதால்…

மாவலி அனலன்

WEEKLY SPECIAL

இப்போது தனியாக….

இப்போது தனியாக….