Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இந்தியாவின் வடக்கு பகுதிகளில் அடை மழை

In
Published: 05:50 GMT, Jun 18, 2017 |
0 Comments
1236
This post was written by : Shailu

இந்தியாவின் வடக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அடை மழை காரணமாக வாகன போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நீடித்த வெப்பமான காலநிலையை அடுத்து நேற்று (சனிக்கிழமை) முதல் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அமிர்தசரஸ் புனித நகரத்தில் கடந்த இரண்டு நாட்களாக காணப்பட்ட 40 செல்சியஸ் வெப்பநிலை, 36 செல்சியஸாக வீழ்ச்சி கண்டுள்ளது.

அத்தோடு, தலைநகர் புது டெல்லியில் 47 டிகிரி செல்சியஸாக காணப்பட்ட வெப்பநிலை, இம் மழை வீழ்ச்சியை தொடர்ந்து, குறைந்த பட்சமாக 25 செல்சியஸாகவும் அதிகபட்சமாக 32 செல்சியஸாகவும்  காணப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த கால பருமழையை விட இம்முறை அதிக மழை வீழ்ச்சியை பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)