Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

காஷ்மீர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை

In இந்தியா
Published: 06:13 GMT, Jun 18, 2017 |
0 Comments
1261
This post was written by : Shailu

 காஷ்மீரில் வன்முறையை ஒடுக்கி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் முழு வீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே, இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கலந்துகொண்டு, விமானப்படையின் பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகளை நிறைவுசெய்த வீரர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிக்கையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “தெற்கு காஷ்மீரின் சில பகுதிகளில் பிரச்சினைகள் நிலவி வருகின்றன. இதற்கு சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில், இந்திய இறையாண்மைக்கு எதிராக தவறான தகவல்களும், வதந்திகளும் பரப்பப்படுவதே காரணம்.

தவறான பிரசாரங்களை நம்பிக்கொண்டு, ஆயுதங்களை ஏந்தும் இளைஞர்கள், விரைவில் உண்மையை உணர்ந்து தங்கள் செயற்பாடுகளை திருத்திக்கொள்வார்கள்.

எனவே இந்திய இராணுவமும், பாதுகாப்புப் படையினரும் முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், விரைவில் காஷ்மீரின் நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.