Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

போர்த்துக்கல் காட்டுத்தீ: பாப்பரசர் சிறப்பு பிரார்த்தனை

In ஐரோப்பா
Published: 11:13 GMT, Jun 18, 2017 |
0 Comments
1312
This post was written by : Elakkiya

போர்த்துக்கலில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளார். சென் பீற்றர் சதுக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பிரார்த்தனையின் நிறைவில், போர்த்துக்கல் மக்களுக்கான விசேட பிரார்த்தனை அமைதியான முறையில் இடம்பெற்றது.

பிரான்சிஸின் மேற்படி சிறப்பு பிரார்த்தனைக்கான அறிவிப்பு சென் பீற்றர் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை, பாதிக்கப்பட்டவர்களை தலைகுனிந்து நினைவுகூர வைத்தது.

போர்த்துக்கலின் கோயம்புரா அருகில் மிக வேகமாக பரவிவரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 59பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.