Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பந்தை வீசியெறிந்த ஜடேஜாவுக்கு போட்டித்தடை

In கிாிக்கட்
Published: 05:30 GMT, Aug 7, 2017 |
0 Comments
1828
icon_com
This post was written by : Varshini
ravindra-jadeja-net-worth-income-bcci-fee-ipl-income

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தின்போது, எதிரணி வீரரை மிரட்டும் வகையில் பந்தை வீசியெறிந்த குற்றத்திற்காக இந்திய அணியின் சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜாவுக்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில், அபாரமாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் கருணாரத்ன மற்றும் மெண்டிஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல், ஜடேஜா மற்றும் அஸ்வின் திணறினர்.

58ஆவது ஓவரை ஜடேஜா வீசியபோது, அதனை கருணாரத்ன எதிர்த்தாடினார். இதன்போது தன்னை நோக்கி வந்த பந்தை, கருணாரத்னவை நோக்கி ஜடேஜா வேகமாக வீசியெறிந்துள்ளார். கருணாரத்ன சுதாகரித்துக்கொள்ள, சக வீரரின் கையை பந்து பதம் பார்த்துள்ளது.

இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பாக மைதான நடுவர்கள் போட்டி நடுவரிடம் முறையிட்டதையடுத்து, பல்லேகலயில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. விதிமுறைப்படி ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, தடைக்கான மூன்று புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg