Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒக்ஸிஜன் பற்றாக்குறை: 60 குழந்தைகள் உயிரிழப்பு

In இந்தியா
Published: 03:21 GMT, Aug 12, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : Surenth

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஐந்து நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்து வருவதாகவும் நேற்றுமுன்தினம் மாத்திரம் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒக்ஸிஜனை பெற்றுக் கொள்ள, 67 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தாததன் காரணமாகவே வைத்தியசாலைக்குத் தேவையான ஒக்ஸிஜன் வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

கோரக்பூர் பகுதியில் இருக்கும் மிகப்பெரிய வைத்தியசாலையாக பி.ஆர்.டி வைத்தியசாலையில் திகழும் அதேவேளை, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் நாடாளுமன்றத் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg