Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்யாவில் மீண்டும் ஜனாதிபதியாக உஹுரு கென்யாட்டா

In உலகம்
Published: 04:43 GMT, Aug 12, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Suganthini

கென்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா, 8.2 மில்லியன் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 54 சதவீதமான வாக்குகள் கிடைத்துள்ளன என சுதந்திரமான மற்றும் எல்லை ஆணையகத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ரைலா ஒடின்கா 6.76 மில்லியன் வாக்குகளையே பெற்றுள்ளார். இவருக்கு 44.7 வாக்குகளே கிடைத்துள்ளன எனவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்தத் தேர்தலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஒடின்கா தெரிவித்திருந்தார்.

இந்தத் தேர்தல் முடிவுகளை நிராகரித்துள்ள எதிர்க்கட்சியினர், உண்மையான தீர்வை வெளிப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளனர்.

55 வயதான உஹுரு கென்யாட்டா, இரண்டாவது தடவையாகவும் கென்யா நாட்டின் ஜனாதிபதியாகப்    பதவியேற்கவுள்ளார்.

வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி தனது உரையில், ‘இந்த நாட்டையும் இந்த நாட்டிலுள்ள மக்களையும் ஐக்கியமாக வழிநடத்திச் செல்லப்படும்’ என்றார்.

‘மேலும், இந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கப்படும்’ என்றார்.

‘எந்தவொரு போட்டியாக இருந்தாலும், அதில் பங்குபற்றுபவர்கள் வெற்றி பெறுவார்கள் அல்லது தோல்வி அடைவார்கள். இது வழமையானது. ஆனால், நாங்கள் அனைவரும் கென்யா என்று அழைக்கப்படும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். கென்யாவைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்’ என்றார்.

இதன்போது, தனது வெற்றிக்காக பாடுபட்ட தனது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg