Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

எல்லையில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: யில்டிரிம்

In ஐரோப்பா
Published: 09:40 GMT, Aug 12, 2017 |
0 Comments
1106
This post was written by : Sylviya

துருக்கியின் எல்லையில் நிலைகொண்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என துருக்கியின் பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.

துருக்கித் தலைநகர் அங்காராவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிரியாவின் இத்லிப் மாகாணத்துடனான துருக்கியின் எல்லையில் அல் கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சில ஜிகாதிக் குழுக்கள் நிலைபெற்றுள்ளதாகவும் அவர்களை விரட்டியடிக்கும் பொருட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பினாலி விளக்கம் அளித்துள்ளார்.

சிரியாவுடனான துருக்கியின் பாப் அல் – ஹவா எல்லை ஊடாக உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது கட்டுப்படுத்தப்படும் என துருக்கியின் சுங்க மற்றும் வர்த்தக அமைச்சர் பியூலன்ட் தெரிவித்ததைத் தொடர்ந்தே யில்டிரிம் மேற்படி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது அனுமதிக்கப்பட்டாலும் குறித்த எல்லை ஊடாக ஆயுதங்கள் அனுப்பப்படுவது அனுமதிக்கப்படாது என ஜனாதிபதி தையீப் எர்டோகனும் நேற்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)