Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீருக்கு சுற்றுலா வாருங்கள்: ராஜ்நாத்சிங் அழைப்பு

In இந்தியா
Published: 03:23 GMT, Sep 12, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Kemasiya

நிலைமை நன்கு மேம்பட்டு உள்ளதால் காஷ்மீருக்கு வெளிநாட்டவர்கள் சுற்றுலா வரவேண்டும்  என உள்த்துறை அமைச்சர்  ராஜ்நாத் வேண்டுகோள் விடுத்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் மாநிலத்துக்கு 4 நாள் பயணமாக சென்றுள்ளார். அவர் அங்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் பாதுகாப்பு படையினருடனும் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் ஜம்மு பிராந்தியத்தை பார்வையிட்ட அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ஜம்மூ காஷ்மீர் பயணத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் பொழுதே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைதியற்ற சூழல் நிலவுவதால் காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது யாரும் அங்கு சுற்றுலா செல்லவேண்டாம்’ என்று இந்தியர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நான் காஷ்மீரை பார்வையிட்ட பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். கடந்த காலங்களை விட  இந்த வருடம் நிலமை சுமுகமாகவே உள்ளது. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதனால் இங்கு அனைவரும் சுற்றுலா மேற்கொள்ள முடியும்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை காஷ்மீர் மக்கள் வரவேற்க தயாராகவேண்டும். பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் முதலீட்டாளர்களும் இங்கு தொழில் முதலீடுகளை செய்யவேண்டும். இதனால் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  காஷ்மீரில் சுற்றுலாத்துறையை வளர்ச்சியடைய செய்வதற்கு மத்திய அரசு விரைவில்  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மற்றும்   காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு,

‘காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அதில் விருப்பம் கொண்டுள்ள யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன். இதில் முறையான சந்திப்பு முறையற்ற சந்திப்பு என்ற கேள்விக்கே இடம் இல்லை. பேச்சு வார்த்தையை விரும்புபவர்கள் அதற்கு முன்வரவேண்டும். இதில் நான் திறந்த மனதுடன் இருக்கிறேன்’  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg