Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இரணைதீவு மக்களின் காணிகளை அளவிடுவதற்கு 15 நாட்கள் தேவை! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Published: 04:43 GMT, Sep 12, 2017 |
0 Comments
1222
icon_com
This post was written by : Puvanes

இரணைதீவு மக்களின் காணிகளின் நில அளவை வரைபடத்தில்  உள்ள கற்களை இனம்காணுவதற்கு  ஏறத்தாள பதினைந்து நாட்கள் வேலை நாட்களுக்கு மேல் வேண்டும் என பூநகரி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் மக்கள் குடியிருந்த பகுதியை நில அளவீடு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலர் அடங்கிய   குழு காலை 9 மணியளவில் பயணத்தினை ஆரம்பித்து  மீண்டும் பிரதேச செயலகத்தை இன்று மாலை வந்தடைந்த   பூநகரி பிரதேச செயலாளர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விரைகின்றது விஷேட குழு – இரணைதீவு மக்களுக்கு விடிவு?

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான காணி அளவீட்டு குழு இன்றைய தினம் இரணைதீவிற்கு பயணமாகியுள்ளது. அளவீட்டு பணிகளை தொடா்ந்து குறித்த பகுதியில் மக்கள் மீளக் குடியேறி தொழில் புரிவதற்கான அனுமதி வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகின்றது.

1993ஆம் ஆண்டு தமது பூர்வீக மண்ணைவிட்டு வெளியேறிய மக்கள் இரணைதீவு பகுதிக்கு சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர்.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் மீண்டும் மக்கள் அங்கு மீள்குடியேறியபோது இரணைதீவில் சென்று தங்கி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அதிகளவான எரிபொருள் செலவு காணப்படுவதாகவும், பிரித்தானியர் காலத்தில் வழங்கப்பட்ட தமது உறுதிக்காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கடந்த மே மாதம் முதல் இரணைதீவு மக்கள், பல்வேறு போராட்டங்களில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டம் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை வழங்கிய போதும், போராட்டம் கைவிடப்படாது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் கடந்த 31ஆம் திகதி கடற்படை முகாமில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் மக்கள் வசித்த காணிகளை விடுவிப்பதற்கான நில அளவீடு செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர், கடற்படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)