Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோர்வேயில் தேர்தல் – ஆளும் கூட்டணி வெற்றி

In ஐரோப்பா
Published: 05:23 GMT, Sep 12, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Suganthini

நோர்வேயில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் ஆளும் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

நோர்வேயின் கன்சர்வேட்டிப் பிரதமர் எர்னா சோல்பெர்க்கின்  (Erna Solberg) ஆளும் கூட்டணிக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், எர்னா சோல்பெர்க் இரண்டாவது தடவையாகவும் ஆட்சி அமைக்கவுள்ளார்.

நோர்வேயில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், எர்னா சோல்பெர்க்கின் ஆளும் கூட்டணிக் கட்சி 169 ஆசனங்களில் 89 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் 90 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், இந்தத் தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் கஹ் ஸ்டோ ( (Jonas Gahr Store,Gahr Store) ) தோல்வி அடைந்துள்ளார்.

இந்நிலையில், ஒஸ்லோவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த எர்னா சோல்பெர்க் (வயது 56), ‘நான்கு ஆண்டுகால தனது ஆட்சிக்கு வாக்காளர்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பதுடன், இது தெளிவான வெற்றியதாகத் தோன்றுகின்றது’ என்றார்.

‘தேர்தல் பிரசாரங்களின்போது, எங்களால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் வெற்றி அளித்துள்ளன. நாங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்’ எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வரிக் குறைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவித்தல் எனும் கருப்பொருளை முன்வைத்து எர்னா சோல்பெர்க் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதேவேளை, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் கஹ் ஸ்டோ, பொதுச் சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சியில் செல்வந்தர்களுக்கான வரியை உயர்த்துதல் எனும் கருப்பொருளை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg