Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைத்தியர்கள் வேலை நிறுத்தம்! – நோயாளிகள் திண்டாட்டம்

In இலங்கை
Published: 05:46 GMT, Sep 12, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Puvanes

மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு இடம் பெற்று வருகின்றன.

சைட்டம் தொடர்பிலான சர்ச்சைகளுக்கு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்தும் தீர்வுகள் கிடைக்காத காரணத்தினால் இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், சுழற்சி முறையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், ஹட்டன், டிக்கோயா உட்பட பல பகுதிகளில் பணிப்புறக்கணிப்பு நடைபெற்று வருவதால் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில், எதிர்வரும் 21ஆம் திகதி மேலும் பல தொழிற்சங்கங்களை இணைத்துக் கொண்டு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

dr_protest002

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg