Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

20ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு பாதகமானது: சுரேஸ் பிரேமசந்திரன்

In இலங்கை
Published: 16:10 GMT, Sep 12, 2017 |
0 Comments
1295
icon_com
This post was written by : Surenth

20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் கொண்டுவரப்பட்டு, பௌத்த மயமாக்கல் சுதந்திரமாக நடக்கும் எனவும் அரச திணைக்களங்களில் அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் களமிறக்கப்படுவார்கள் இதனால் தமிழ் மக்களுக்கு பாதகமான பல செயற்பாடுகளை அரசாங்கம் செய்யும் எனவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) சுரேஸ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

18 மாதங்களுக்கு அதிகமான காலம் உள்ள நிலையில் மாகாணசபை கலைக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்துவதென்று தீர்மானித்தால், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கியதேசிய கட்சி, தமிழரசு கட்சி போன்ற பெரிய கட்சிகளுக்கு மாத்திரமே பொருத்தமானதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி நன்கு திட்டமிட்டு திருத்தங்கள் செய்துள்ளதாக கூறிக்கொண்டு 20ஆவது திருத்தச்சட்டத்தை அங்கீகரிக்க வைத்திருக்கின்றது எனவும் இது அநாகரிகமான விடயமாகும் எனவும் கூறினார்.

மேலும், திருத்தங்கள் செய்யப்படும் என உயர் நீதிமன்றில் மட்டுமே கூறப்பட்டுள்ளது, அது நாடாளுமன்றில் கூறப்படவில்லை, நாடாளுமன்றில் கூறப்பட்ட பின்னர் என்ன பிரச்சினைகள் வரும் என எவருக்கும் தெரியாது என சுரேஸ் பிரேமசந்திரன் சாடியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)