Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ராணுவ உபகரணங்களை தயாரிக்க மோடி இணக்கம்!

In இந்தியா
Published: 03:48 GMT, Sep 13, 2017 |
0 Comments
1113
icon_com
This post was written by : Varshini

பெலாரஸ் நாட்டிற்கு தேவையான ராணுவ உபகரணங்களை இந்தியாவில் தயாரிப்பதை ஊக்குவிப்பது குறித்து, அந்நாட்டு ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள பெலாரஸ் ஜனாதிபதி லுக்காஷேங்கோவிற்கும் பிரதமர் மோடிக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

குறித்த சந்திப்பிற்கு முன்னதாக, ராஜ்கோட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பெலாரஸ் ஜனாதிபதி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் நடைபெற்ற சந்திப்பில், இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ராணுவ உபகரண தயாரிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகள் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படுமென பிரதமர் மோடி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெலாரஸிலுள்ள இந்திய நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு சாதகமான மற்றும் சிறந்த திட்டங்களை கடைப்பிடிப்பதாக பெலாரஸ் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, இருநாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல் துறைசார் பத்து ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)