Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

370,000 ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் தஞ்சம்

In உலகம்
Published: 05:45 GMT, Sep 13, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Suganthini

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இதுவரையில் 3 இலட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவரகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 2 இலட்சம் சிறுவர்களுக்கு அவசர உதவி தேவைப்படுகின்றது எனவும் அம்முகவரகம் தெரிவித்துள்ளது.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் வன்முறை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், பங்களாதேஷுக்கு தப்பிச்செல்லும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இவ்வாறு பங்களாதேஷில் தஞ்சம் கோரும் அகதிகளுக்காக அங்கு ஆயிரத்து 500 ஏக்கர் முதல் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அகதி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் அகதிகள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், புதிதாக வரும் அகதிகளையும் அந்த முகாமுக்குச் செல்லுமாறு பங்களாதேஷ் அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இவ்வாறு வரும் அகதிகள் பசி மற்றும் நோயால் சிரமப்படுகின்றனர். மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும் அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவரகம் கூறியுள்ளது.

இது இவ்வாறிருக்க, ராஹினி மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரமானமுறையில் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கு இன அழிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்மட்ட அதிகாரிகள் நேற்றுமுன்தினம் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)