Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரதத்தில் ஜப்பான் பிரதமர்! – வரலாற்றில் ஓர் மைல் கல்

In இந்தியா
Published: 08:24 GMT, Sep 13, 2017 |
0 Comments
1275
icon_com
This post was written by : Puvanes

இந்தியாவிற்கான இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள, ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்ஸோ அபே இன்று(புதன் கிழமை) குஜராத்திற்கு வருகை தரவுள்ளார்.

குஜராத் – அஹமதாபாத் விமான நிலையத்தினை வந்தடையவுள்ள ஜப்பான் பிரதமரை வரவேற்க பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலர் குஜராத் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை நடைபெறவுள்ள ஜப்பான் மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான கூட்டத்தில் இரு நாட்டு பிரதமர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, நாளைய தினம் அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள விழா ஒன்றில் மோடியும், ஷின்ஸோ அபேவும் கலந்து கொண்டு, அதிவேக புல்லட் இரயில் திட்டத்தின் அடிக்கல்லினையும் நட்டுவைக்கவுள்ளனர்.

குறித்த திட்டத்திற்கு 88 கோடி இந்திய ரூபாய்களை ஜப்பான் அரசு 50 வருடங்களில் மீளச் செலுத்தும் வகையில் கடன் ஒன்றினையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாளை நடைபெறவுள்ள விழாவை முன்னிட்டு குஜராத் மாநிலம் முழுவதும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விழாவில் 28 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலாச்சார நடனதாரகைகளும் அழைத்துவரப்பட்டு கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் பௌத்த பிக்குகள் விழாவில் கலந்து கொள்ள குஜராத்திற்கு வருகைத்தந்துள்ளதோடு, இந்த அதிவேக புல்லட் இரயில் திட்டமானது இந்தியாவின் அபிவிருத்தி வரலாற்றில் ஓர் மைல்கல் எனவும் கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg