Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நம்பிக்கையீனங்களுக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்: சிவமோகன்

In இலங்கை
Published: 05:53 GMT, Oct 2, 2017 |
0 Comments
1360
This post was written by : Varshini

தமிழினத்தை காலங்காலமாக சிங்கள அரசுகள் ஏமாற்றிய  வரலாறுகள் யாரும் அறியாத ஒன்றல்ல. அதன் தாக்கம் தமிழ் மத்தியில் இப்போதும் நம்பிக்கையீனங்களாக இருக்கின்ற நிலையிலேயே ஜனநாயக வழியில் போராட வேண்டியவா்களாக கூட்டமைப்பு இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், மன்னாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நீண்ட கால தமிழர் விடுதலைப் போராட்டம், ஆரம்ப காலத்தில் அஹிம்சை ரீதியிலேயே முன்னெடுக்கப்பட்டது. பின்னர், தந்தை செல்வாவின் வழியில் வழிநடத்தப்பட்டு, தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டமாக பரிணமித்து, இன்று மீண்டும் ஒரு அஹிம்சை ரீதியிலான ஜனநாயக போராட்டத்தின் வழியில் வந்து நிற்கின்றோம்.

நீண்ட காலமாக சிங்கள அரசுகள் தமிழினத்தை ஏமாற்றி வருகின்ற வரலாறுகள் நாங்கள் அறிந்தவையே. துரதிஷ்டவசமாக எமக்கு ஏற்பட்ட அந்த அனுபவங்களின் அடிப்படையில், எமது தமிழ் மக்கள் இன்று நம்பிக்கை இன்றி ஒரு விளிம்பில் சென்று கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு ஜனநாயக வழியில் போராட வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

அந்நவகையில் கூட்டமைபின் தலைவா் சம்பந்தன் அவா்கள் நிதானமாக விடயங்களை கையாண்டு கொண்டு இருக்கின்றாா். அவா் தமிழ் மக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்றுவாா்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg