Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷேன் வோர்னின் மறுபாதி இவர்தான்!

In கிாிக்கட்
Published: 06:25 GMT, Oct 11, 2017 |
0 Comments
1518
icon_com
This post was written by : Anojkiyan

முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னின் பந்து வீச்சு பாணியிலேயே தானும் பந்து வீசி வருவதாக இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டிக்கு முன்னதாக வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஷேன் வோர்னின் ரிஸ்ட் ஸ்ப்ரின் ப்ஃலைட் மற்றும் டிரிப்ட் பந்து வீச்சுக்களை, துடுப்பாட்ட வீரர்கள் இனங்கண்டு துடுப்பெடுத்தாடுவது மிகக் கடினமாது. அவரது பந்து வீச்சு பாணியைப் பின்பற்றி நான் கடுமையாக உழைக்கிறேன். அதில் சிறிய வெற்றி கிடைத்தாலும் அது எனக்கு மிகப்பெரிய விடயமாகும்.

அதேபோல் பிரட் ஹொட்ஜின் சினமன் பந்து வீச்சு முறைக் குறித்தும் நான் கற்றுக் கொள்கிறேன். அவர் வீசும் ப்ளிப்பர் பந்து வீச்சுக்கள் அற்புதமானது.தற்போது 46 வயதான அவர் இன்னும் விளையாடி வருகின்றார். சுமார் 23 வருடங்களாக அவர் பந்தை சுழற்றுகிறார். இது அவரிடமிருந்து நிறைய விடயங்களைக எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg