Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரசியல் கைதிகள் விடயத்தில் திட்டமிட்ட சதி! – ஜீ.குணசீலன்

In இலங்கை
Published: 07:29 GMT, Oct 11, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Varothayan

தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகள் நீதி அற்ற நிலையில் பிற்போடப்பட்டு, திட்டமிட்ட வகையில் அவர்களின் விடுதலை தாமதப்படுத்தப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக மன்னாரில் வைத்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து வட மாகாண அமைச்சர் ஜீ.குணசீலன் பேசுகையில், “பல ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை நியாயத்திற்காக பல்வேறு விதமான போராட்டங்களை சிறைச்சாலையிலேயே மேற்கொண்டு வந்தார்கள்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உண்ணாவிரத போராட்டங்கள் போன்று கடந்த காலங்களில் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு காரணங்களினால் அல்லது பல அரசியல் கட்சிகளினுடைய வாக்குறுதிகளினால் அல்லது பல்வேறு தலைவர்களுடைய வாக்குறுதிகளினால் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் அடிக்கடி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறான அகிம்சைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தவிர, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை அரசினாலும் எடுக்கப்படவில்லை ஏனைய அரசியல்வாதிகளினால் கூட மேற்கொள்ளப்படவில்லை என்ற குறை இருக்கின்றது.

எங்களுடைய இயலாமையினை நினைத்து நாங்கள் குற்ற உணர்வுடன் இருப்பதா? அல்லது இதற்கான சரியான வழி வகைகளை அரசாங்கத்தை செய்ய வைப்பதில் எங்களுடைய பங்களிப்பு குறைவானதாக உள்ளதா? என்கின்ற சந்தேகம் எழுகின்றது.

ஆகவே இவர்களுடைய விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். இவர்களுடைய உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிராகவும், அவர்களுடைய விடுதலைக்காக பொது மன்னிப்பை வழங்கி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியுள்ளது.

நாட்டில் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்துள்ள போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விசாரனைகள் நீதி அற்ற நிலையிலே பிற்போடப்பட்டு திட்டமிட்ட வகையிலே இவர்களுடைய விடுதலை தாமதப்படுத்தப்படுவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

இவ்விடயத்தில் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)