Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கென்ய எதிர்க்கட்சி தலைவரின் அறிவிப்பால் குழப்ப நிலை

In உலகம்
Published: 08:05 GMT, Oct 11, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Suganthini

கென்யாவில் மீண்டும் நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடின்கா அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு குழப்பகரமான சூழ்நிலை தோன்றியுள்ளது.

கடந்த தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாகவும், இதற்கு காரணமான தேர்தல்கள் அதிகாரிகள் சிலரை மாற்றுவதற்கு எந்தவித நடவக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

எனவே, எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் ரைலா ஒடின்கா அறிவித்துள்ளார்.

கென்யாவில் கடந்த ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில், உஹுரு கென்யாட்டா அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடின்கா தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார்.

இந்தத் தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறி எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடின்கா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அரசியலமைப்பை தேர்தல்கள் ஆணையகம் பின்பற்றவில்லை எனக் கூறியதுடன், 60 நாட்களுக்குள் மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து, இம்மாதம் 26ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்த தேர்தல்கள் ஆணையகம் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)