Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருணைக் கொலையை அங்கீகரிப்பது சாத்தியமற்றது: மத்திய அரசு

In இந்தியா
Published: 08:28 GMT, Oct 11, 2017 |
0 Comments
1177
This post was written by : Elakkiya

இந்தியாவில் கருணைக் கொலையை அங்கீகரிப்பது சாத்தியமற்றது என மத்திய அரசு உச்ச நீதிமன்றில் விளக்கமளித்துள்ளது.

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் குணமடையும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில் மருத்துவமனைகளில் அவர்களை கருணைக் கொலை செய்வதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கடந்த 2005 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனம் ஒன்றினால் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று (செவ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மத்திய அரசு சார்பில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கருணை கொலை அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அதனை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் அதை பொது கொள்கையாக உருவாக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவரது மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தனிநபர்கள் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மருத்துவ சபையே ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும் என்பதுடன் அதுவே இறுதி அதிகாரம் படைத்ததாக இருக்க வேண்டும் என்றும் அதிகளவில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ‘அருணா ஷான்பாக் என்பவரது வழக்கில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில், ஒரு வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளோம். அத்துடன், சட்ட ஆணையமும் சிபாரிசுகளை அளித்துள்ளது. அவை அரசின் பரிசீலனையில் உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg