Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை:- ராஜித

In இலங்கை
Published: 09:19 GMT, Oct 11, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Puvanes

கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், யுத்தம் நிறைவு பெற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்ட நிலையில் எத்தனை காலத்திற்கு தமிழ் அரசியல் கைதிகளை சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்திருக்க முடியும்.

கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூலமாக எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை அதனால் வழக்குகள் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுக்கவேண்டும் எனவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு மக்களின் காணிகள் விடுவிப்பு குறித்து ஊடவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

தற்போது வரையிலும் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட வடக்கு மக்களின் காணிகளில் நூற்றுக்கு 62 சதவீனமானவை விடுவிக்கப்பட்டு விட்டன என ராஜித பதில் அளித்தார்.

தொடர்ந்து, எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அல்லது மாற்றீடு காணிகளை வழங்குவதற்காக இராணுவத்தரப்புடன் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம் கூடிய விரைவில் இதற்கான  செயற்பாடுகளை முன்னெடுப்போம் எனவும் ராஜித தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)