Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக அலிக்கான் ஷெரீப்!

In இலங்கை
Published: 07:10 GMT, Nov 7, 2017 |
0 Comments
1412
icon_com
This post was written by : Varshini

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக அலிக்கான் ஷெரீப் பதவியேற்றுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 109வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

அமர்வின் ஆரம்பத்தில்,  தனது பதவிக்கடிதத்தினை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்து தமது முதலாவது உரையை அலிக்கான் ஷெரீப் நிகழ்த்தியுள்ளார்.

அவையின் புதிய உறுப்பினரை அமைச்சர்களும், சக உறுப்பினர்களும் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

வடக்கு மாகாணசபையில் அங்கம் வகித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அலிக்கான் ஷெரீப் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

alikkan sherif (1) alikkan sherif (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg