Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் நிலநடுக்கத்தின் பாதிப்பு- 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீதிகளில் தஞ்சம் (3ஆம் இணைப்பு)

In உலகம்
Published: 04:38 GMT, Nov 13, 2017 |
0 Comments
1448
icon_com
This post was written by : Vithushagan

ஈரான் மற்றும் ஈராக் வடக்கு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 348ஐ தாண்டியுள்ளது. அத்துடன்  6,300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து வீதிகளில் தஞ்சம்புகுந்துள்ள 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு தங்குமிடம் தேவைப்படுவதாக ஈரானிய உதவி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி நகரின் முக்கிள மருத்துவமனை நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஈரானின் மேற்கு கெர்மான்ஷா மாநிலத்திலேயே அதிகளவானோர் உயிரிழந்துள்ளதாகவும்   ஈராக்கில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு  170 ஐ தாண்டியது: மீட்பு தொடா்கின்றது(2ஆம் இணைப்பு)

ஈரான் மற்றும் ஈராக் வடக்கு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 170 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் மேற்கு கெர்மான்ஷா மாநிலத்தில் மாத்திரம் குறைந்தது 164 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில ஊடகம் அறிவித்துள்ளது.

அதேவேளை ஈராக்கில் ஆறுபேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளதுடன் சேதங்களும் அதிகமாக காணப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

இவ்வாறிருக்க ஈராக்கிய தலைநகரான பாக்தாத்தில் அமைந்துள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஈரானில் பாரிய நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு!

ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதில்  பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்குண்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு மேலும் நுாற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இரண்டு நாடுகளுக்குமான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஈரானின் ஹோ்மன்ஷா மாநிலத்தில்  மத்திய கிழக்கு நேரப்படி   நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு,  ரிக்டர் அளவுவில் சுமாா் 7. 3 அளவிலான சக்தி வாய்ந்த இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் சுமாா் 130 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதனால் உயிரிழப்புக்கள் அதிகமாக ஏற்பட்டள்ளதுடன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

சுமார் 8 கிராமங்கள் இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம் மற்றும் தொலைதொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று ஈரான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நிலநடுக்கம் ஈராக்கிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கிய செய்திகளின் அடிப்படையில், ஈராக்கில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமாா் 50 போ் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடா்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)