Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸ் அரிசி ஆராட்சி நிலையத்திற்கான கட்டுமானப் பணியை ஆரம்பித்துவைத்தார்: மோடி!

In இந்தியா
Published: 10:37 GMT, Nov 13, 2017 |
0 Comments
1187
icon_com
This post was written by : Kemasiya

கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந் நாட்டில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெறவுள்ள கட்டுமானப் பணியினை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிய உச்சி மாநாட்டின் இடையே, பிலிப்பைன்ஸின் ‘லாஸ் பனாஸ்’ என்ற இடத்தில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்ற மோடி, அங்கு இடம்பெறவுள்ள கட்டுமானப் பணியினை ஆரம்பித்து வைத்துள்ளதோடு, இந்திய விஞ்ஞானிகளையும் சந்தித்து பேசியுள்ளார்.

இதன் போது அவர்கள் சிறப்பு நெல் ரகங்கள் குறித்தும், அதனால் இந்திய விவசாயிகளுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கினார்கள்.

அத்துடன் 14-18 நாட்கள் வரை வெள்ள நீரில் மூல்கியிருந்தாலும், அழுகாமல் தாக்கு பிடிக்கும் நெல் வகைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கப்பட்டது.

அதனை கேட்டதும் பாராட்டுக்களை தெரிவித்த பிரதமர், இந்திய விவசாயிகளுக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற நவீன நெல்வகை மாதிரிகளை, அந்த ஆய்வு கூடத்திற்கு அன்பளிப்பாக வழங்கிவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

modi 1 modi 2 modi 3 modi 4

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)