Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெனிசுவேலா மீதான பொருளாதார தடைகள்- ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல்

In ஐரோப்பா
Updated: 12:23 GMT, Nov 13, 2017 | Published: 12:23 GMT, Nov 13, 2017 |
0 Comments
1301
This post was written by : Elakkiya

வெனிசுவேலா மீது ஆயுதத்தடைகள் உள்ளிட்ட பொருளாதார தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒப்புக் கொண்டுள்ளனர். நாட்டின் நெருக்கடிநிலை அதிகரிப்பதற்கு கடந்தமாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலே காரணம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரங்களுக்கான தலைவர் ஃபெட்ரிகா மொஹெரினி, “நிரந்தரமான தடைவிதிப்புக்கான ஒத்துழைப்பை பெறுவதற்கு உறுப்பு நாடுகளிடமிருந்து அறிவிப்பு கடித்தை எதிர்பார்க்கின்றேன். அடுத்த வாரங்களில் சபை முடிவுகள் அனுமதிக்கப்படும். அடுத்த வெளியுறவு விவகார கவுன்சில் இந்த முறையான முடிவை ஏற்றுக் கொள்ளும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மர் கப்ரியல், “எதிர்கால பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கேள்விகளுக்கு நாம் வரலாற்று நடவடிக்கை எடுக்கின்றோம். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கையை வலுப்படுத்தும். நீண்ட விவாதத்திற்கு ஒரு தற்காலிக முடிவு. ஒரு மைல்கல் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg