Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கம் கட்டுப்பணம் செலுத்த முன்வராதது ஏன்?

In இலங்கை
Published: 06:00 GMT, Dec 6, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Varshini

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்த அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் முன்வராமையானது, தேர்தலை மீண்டும் பிற்போட முன்னெடுக்கும் சதி நடவடிக்கையா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதென பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையில் பொதுஜன பெரமுன மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சாகர காரியவசம் மற்றும் சபரகமுவ மாகாண அமைச்சர் கஞ்சன ஜயரத்ன ஆகியோர் பொலனறுவை தேர்தல் காரியாலயத்தில் கட்டுப்பணம் செலுத்தினர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, சாகர மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

பல போராட்டங்களின் பின்னரே தேர்தலை நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதென குறிப்பிட்ட சாகர, இம்முறையும் அரசாங்கம் தேர்தலை இழுத்தடிக்க முயலுமாயின் மக்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடும் நிலை ஏற்படுமென மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சபரகமுவ மாகாண அமைச்சர் கஞ்சன, ஜனநாயகத்தை கட்டிக்காப்பதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை செயற்படுத்துவதற்கு சிறிதும் முனைப்புக் காட்டாமல் உள்ளதெனக் குறிப்பிட்டார்.

பிணை முறி உள்ளிட்ட மோசடிகளுக்கு தீர்வு காணாமல், மக்களை பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாக்கி நாட்டை சீரழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் தேர்தல் ஊடாக நல்லாட்சி எனும் அரசாங்கத்திற்கு தகுந்த பாடத்தை புகட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாகவும் இதன்போது ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கஞ்சன, ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டு வெளியேறினால் மாத்திரமே அதற்கான பேச்சுவார்த்தைக்கே சாத்தியம் என்று குறிப்பிட்டதாகவும், எனினும் அதற்கான எந்த சமிக்ஞையும் சுதந்திரக் கட்சியிடம் காணப்படவில்லையென்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று அரசாங்கத்திற்கு தக்க பாடத்தை புகட்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)