Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போன உறவினர்களுக்காய் காத்திருக்கும் திருவானந்தபுர மக்கள்

In இந்தியா
Published: 07:17 GMT, Dec 6, 2017 |
0 Comments
1077
icon_com
This post was written by : JudeDanish

ஒஹிப் புயல் காரணமாக கடலில் காணாமல் போன உறவினர்களின் வருகைக்காக உறவினர்கள் கரையோரத்தில் காத்திருக்கின்றனர்.அந்த வகையில் தமிழகத்தின் கன்னியாக்குமரி மற்றும் கேரளாவின் திருவானந்தபுரம் ஆகிய பகுதிகள் சூறாவளி காரணமாக பாதிப்படைந்திருந்தன.

கடந்த வாரம் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக ஏற்பட்ட ஒஹிப் புயல் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.  அந்த வகையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனர்த்தம் காரணமாக கரை திரும்ப முடியாது தத்தளித்த நிலையில் அவர்களை மீட்கும் பணியில் இந்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இருந்த போதிலும் மேலும் சில மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் கேரளா தலைநகர் திருவானந்தபுரம் பகுதியில் உள்ள மீனவ குடும்பங்கள் தமது உறவினர்கள் பாதுகாப்பாக வீடு வந்து சேரவேண்டும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்திய கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்பு படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.  ஒஹிப் புயல் காரணமாக இந்தியாவில் 16 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)